சீனாவில் போயிங் 737 விமானம் விழுந்த இடத்தில் காட்டுத் தீ பரவி உள்ளதால் மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 133 பயணிகளுடன் குவாங்ஸி மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாது. இதனால் விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் சீனா ஈஸ்டன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது “போயிங் 737-800” ரக விமானங்கள் அனைத்தையும் இயக்குவதை இன்று முதல் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக ஏர்பஸ் ஏ320 உள்ளிட்ட வேறு விமானங்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.