Categories
அரசியல் மாநில செய்திகள்

போயும், போயும்… மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே…! கமலுக்கு பாடலில் பதிலடி …!!

அதிமுகவினர் யார் காலையும் பிடிக்கவில்லை, கமலஹாசன் தான் ஓட்டுக்காக அதிமுகவினர் காலை பிடிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். எம்ஜிஆரின் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார் என்ற எம்ஜிஆரின் பாடலை மேற்கோள் காட்டி கமலஹாசன் செய்த ட்விட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயக்குமார் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

அவர் கூறும் போது, கமல் எங்களுடைய கட்சிக்காரரின் கால்களை எல்லாம் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு மானமில்லை…. ஒரு ஈனமில்லை….  அவர் எப்போதும் வால் பிடிப்பார் என்று சொன்னதை போல அவர் எங்களுடைய வாலை பிடித்துக் கொண்டிருக்கிறார்.எங்க ஓட்டை எப்படியாவது வாங்குவதற்கு இப்படி பேசுகின்றார். ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால்… போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே என்ற பாடலை பாடி கமலை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

 

Categories

Tech |