செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கேள்வி கேட்டால் பதில் சொல்லுறத கேக்குறதுக்கு ஒரு பக்குவம் இருக்க வேண்டும். அமைச்சர் சேகர்பாபு உட்கார்ந்து இருக்கிறார் என்றால் கேள்வியே கேட்க மாட்டேங்குகிறீர்கள், அமைதியாக உட்கார்ந்து இருக்குறீர்கள். அவரே சொல்கிறார் கேள்வி கேளுங்க, போரடிக்குது என்று.
அப்புறம் நம்ம முதலமைச்சர் அவர்கள் பத்திரிகை நண்பர்களை பார்த்து கேள்விகளையெல்லாம் எதிர்கொண்டாரா எதாச்சு. 200 வாக்குறுதிகள் நிறைவெற்றியுள்ளோம் என்று சொன்னார், உங்களிடம் வந்து பேசுனாரா ? வெள்ளையறிக்கை கொடுத்தாரா ? கேள்வி கேட்டீர்கள் என்றால் பதில் சொல்ற ஒரு மனிதருக்கு கண்ணியம், மரியாதை கொடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, ஒரு கேள்வி பதில் முடிவதற்கு முன்னதாக அடுத்தடுத்த கேள்வி கேட்டதால் அண்ணாமலை இந்த விளக்கத்தை கொடுத்தார்.