சுமார் 6 கோடி மதிப்புள்ள ஓவியத்தை போரடித்ததால் பேனாவால் வரைந்த காவலாளி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ரஷ்யா நாட்டில் யெல்ட்சின் மையத்தில் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த மையத்தில் புதிதாக ஒரு காவலாளி வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் 60 வயதான அந்த காவலாளி வேலைக்கு சென்ற முதல் நாளே டிரெட்டியாகோவ் கேலரியில் இருந்து கடனாக பெற்ற கலைஞர் லெபோர்ஸ்காயாவின் “மூன்று உருவங்கள்” என்ற ஓவியத்தின் மீது பால்பாயிண்ட் பேனாவை கொண்டு கண்களை வரைந்துள்ளார். இதனால் ஓவியத்தை சேதப்படுத்திய காவலாளியை பணியை விட்டு நீக்கி விட்டனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விசாரணையில் காவலாளி போரடித்ததால் பேனாவால் வரைந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த ஓவியத்தை மாஸ்கோ கேலரிக்கு மறுசீரமைப்புகாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மறுசீரமைப்புக்கு சுமார் 2 லட்சம் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மறுசீரமைப்புக்கான செலவை யெல்ட்சின் மையம் ஏற்றுக் கொள்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. “மூன்று உருவங்கள்” என்ற இந்த ஓவியத்தின் மதிப்பு எவ்வளவு என்பது தெரியவில்லை. குறிப்பாக ஆல்பா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சுமார் 6 கோடி ரூபாய்க்கு இந்த ஓவியத்தை காப்பீடு செய்துள்ளனர்.