உன்னாவில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்க உத்தரபிரதேச அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் .உயிர் இழந்த இளம்பெண் குடுப்பத்திற்குபிரியங்கா காந்தி நேரில்சென்று ஆறுதல் தெரிவித்தார் .
பாலியல் வன்கொடுமை கண்டித்து உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமாஜ்வாதி கட்சியினர் சட்டமன்ற முன்பாக தர்ணா போராட்டம் நடத்தியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் 5 பேர் கும்பலால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட இதன்பின் உயிரிழந்திருப்பது துயரங்கள் இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார் . மேலும் இது தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்