Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போராடி காதலனை கரம் பிடித்த ஆசிரியை…. தாலியை கழற்றி கொடுமைப்படுத்திய மாமியார்…. பரபரப்பு சம்பவம்…!!!

போராடி காதலனை கரம் பிடித்த ஆசிரியையின் தாலியை கழற்றி மாமியார் கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியையான கல்பனா(40) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக கல்பனாவும் பக்கத்து தெருவில் வசிக்கும் ஜெகன்(32) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ஜெகனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜெகன் கல்பனாவை திருமணம் செய்து கொள்ள மறுத்து தெரிவித்தார். இதுகுறித்து கல்பனா விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார்.

இதனை அடுத்து போலீசார் இரு விட்டாரையும் அழைத்து விசாரணை நடத்திய போது ஜெகன் கல்பனாவை காதலித்ததாக ஒப்புக்கொண்டார். பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி போலீசார் முன்னிலையில் ஜெகன் கல்பனாவை திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாள் முதல் ஜெகன் கல்பனாவுடன் இணைந்து வாழவில்லை. மேலும் ஜெகன் வீட்டாரும் கல்பனாவை மருமகளாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இதற்கிடையே தாலி கட்டி விட்டு தன்னுடன் வாழாமல் கணவர் தலைமறைவாகி விட்டதாக விருதாச்சலம் காவல் நிலையத்தில் கல்பனா புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து உறவினர் வீட்டில் வசித்து வந்த கல்பனாவுக்கு தனது கணவர் வீட்டிற்கு வந்ததாக தகவல் கிடைத்தது. இதனால் கல்பனா அங்கு சென்றபோது மாமியாரும் மூன்று நாத்தனார்களும் இணைந்து கல்பனாவை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

மேலும் கல்பனாவின் தாலிக்கயிற்றை கழட்டி எடுத்து ஜெகனின் தாய் மற்றும் சகோதரிகள் அவரை ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனை அடுத்து தன்னை துன்புறுத்திய மாமியார் நாத்தனார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜெகனை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்பனா போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுதார். அவரை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |