மூன்றாவது நாளாக போக்குவரத்து கழக ஊழியர்கள் போராடி வருகின்றனர். ஆனால் முதல்வர் பழனிசாமி அவர்களை அழைத்துப் பேச மறுப்பு தெரிவித்து வருகிறார். என்று மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 3-வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓய்வூதியர்களுக்கான பணப்பலன், 14 வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்த கோரிக்கைகளுடன் ஒன்பது தொழிற்சங்க கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அரசு பேருந்துகள் எண்ணிக்கை குறைவாக இயக்கப்படுவதால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை, தொழிலாளர் நல சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் துணை ஆணையர் லட்சுமணன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தையை நடத்த முதல்வர் பழனிசாமி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மறுத்து வருவது கண்டனத்திற்குரிய செயல் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். போக்குவரத்து ஊழியர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த முடிவையும் எடுக்காமல் தாமதம் காட்டி வருகிறார் என்று அவர் கூறியுள்ளார்.