Categories
தேசிய செய்திகள்

போராடும் விவசாயிகள்….! ஆதரவாக நீதிமன்றம்…. பிடிவாதமாக மத்திய அரசு… !!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் இன்றைய விசாரணை தொடங்கிய உடனே இந்த போராட்டம் நடத்தப்படுவது குறித்து எல்லாம் நாங்கள் தற்போது எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. முழுக்க முழுக்க மத்திய அரசு இந்த விவகாரத்தில் கையாண்ட விதம் குறித்தும், அதேபோல இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு காட்டக்கூடிய ஆர்வம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விசாரிக்க போகிறோம் என்பதை கூறி விசாரணையை தொடங்கினார்கள். அதில் ஒரு முக்கிய விஷயமாக தற்காலிகமாக இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க நீங்கள் நினைக்கிறீர்களா ?  என்று மிக முக்கியமான கேள்வியை மத்திய அரசிடம் கேட்டு இருக்கிறார்கள்.

மத்திய அரசை பொறுத்தவரை வேளாண் சட்டங்கள் சொல்லக் கூடிய விஷயங்கள் குறித்து  எதுவும் செல்லவில்லை. மீண்டும் மீண்டும் சொல்வது நாங்கள் இந்த போராட்டத்தை சரியான முறையில் கையாண்டு வருகிறோம். அமைதியான முறையில் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் அழைப்பு விடுத்து இருக்கின்றோம். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் காது கொடுத்து கேட்பதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் விவசாயிகளும் அவர்களது நிலையிலிருந்து இறங்கி வர வேண்டும். குறிப்பாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவது இயலாது என்பதை நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏற்கனவே உறுதி படுத்தி விட்டார்கள்.

அதற்குப் பிறகு வெளியில் அமைச்சர்கள் சொல்லிவிட்டார்கள். உள்துறை அமைச்சர் கூறி விட்டார். பிரதமர் நரேந்திர மோடியும் பலமுறை அதனை உறுதிபடக் கூறிவிட்ட சூழலில் மத்திய அரசை பொறுத்தவரை மூன்று வேளாண் சட்டங்களில் சில திருத்தங்களை வேண்டுமானால் மேற்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறோம் என்பதை அவர்கள் திட்டவட்டமாக நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தை முழுமையாக கையிலெடுக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றமே நேரடியாக குழுக்களை அமைத்து அவர்களை சமாதானப்படுத்த கூடிய வேலைகளில் ஈடுபடுவார்கள். அதேநேரத்தில் சட்டங்களில் கூறிய கருத்துக்கள் விவசாயிகளை பாதிக்கிறதா ? உள்ளிட்ட விஷயங்களை குழுவிடம் கொடுத்து அறிக்கை சமர்ப்பித்து அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் உத்தரவு பிறப்பிக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |