ஹிஜாப் அணிவது தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவண்கரே மாவட்டத்தில் இன்று ஹிஜாப் அணிவது தொடர்பான போராட்டம் நடைபெற்றது. அதாவது கல்லூரிக்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார்அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.