இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த மாதம் 9 ஆம் தேதி போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் அதிபர் அலுவலகம் அருகில் உள்ள காலிமுக திடலிலும், மகிந்த ராஜபக்சே வீடு அமைந்துள்ள டெம்பிள் ட்ரீஸ் ஆகிய பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இதனிடையில் அமைதியாக போராடிய வந்தவர்கள் மீது கடந்த 9ஆம் தேதி ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியினர் கடுமையாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீதான ஆளும் கட்சியினர் தாக்குதல் குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல் தாக்குதலில் சம்பந்தம் உள்ளதாக ஆளும் கட்சி எம்பிக்கள் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ, மிலன் ஜெயதிலகே, சனத் நிஷந்தா, சஞ்சீவா எடிரிமன்னா, மூத்த போலீஸ் டி.ஐ.ஜி. உள்ளிட்ட 22 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் மீது நேரடி மற்றும் சந்தர்ப்ப சாட்சியங்கள் இருந்தால், அவர்களை கைது செய்ய வேண்டும் என்று சி.ஐ.டிக்கு அட்டார்னி ஜெனரல் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஆளும் கட்சி எம்பிக்கள் சனத் நிசாந்த மிலன் ஜெயதிலகே ஆகியோர் நேற்று கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் தாக்குதல் நடத்தியவர்களுடன் இருந்ததாக தெரியவந்தது.
மேலும் சந்தேகத்துக்குரிய 22 பேர் பட்டியலில் உள்ள டிஐஜி தென்னகூனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தாக்குதல் நடத்தி அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது. மேலும் அட்டார்னி ஜெனரலின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று போலீஸ் ஐ.ஜி.யும் சிஐடிக்கு உத்தரவிட்டு உள்ளார். எனவே டி.ஐ.ஜி. தென்கூன் உள்ளிட்ட 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதில் பெரும்பாலானோர் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.