Categories
தேசிய செய்திகள்

போராட்டங்களின் எதிரொலி….. அக்னிபத் திட்டத்தில் வயது வரம்பு உயர்வு….. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவில் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலை வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் நேற்று 2-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த போராட்டம் பல இடங்களில் ரயில்களை மறித்தனர். பீகாரில் 2 ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் கல்வீச்சில் பெண் எம்.எல்.ஏ. காயமடைந்துள்ளார். இந்நிலையில் அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கான வயது 23 ஆக உயர்த்தியுள்ளது. மேலும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் 17.5 முதல் 21 வயதுகாக நியமிக்கப்பட்டிருந்த வயது 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |