Categories
அரசியல் மாநில செய்திகள்

போராட்டத்தால்…. அனைத்து நாட்களும் கோவில்கள் திறப்பு… முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன அண்ணாமலை!!

அனைத்து நாட்களும் கோவில்கள் திறக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சரின் முடிவை வரவேற்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்..

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.. ஆனால் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல வாரத்தில் 4 நாட்கள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.. அதாவது, வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.. இதனால் பாஜக இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் இந்த மூன்று நாட்களும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.

தமிழக அரசு மத்திய அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படிதான் கோவில்கள் மூடப்பட்டுள்ளதாக விளக்கமளித்தது.. இருப்பினும் கோவில்களை திறக்கப்பட வேண்டுமென பாஜக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போராட்டமும் நடத்தியது.. இந்த நிலையில் இன்று தமிழக அரசு கொரோனா குறைந்து வந்த நிலையில் கூடுதல் தளர்வுகளை அளித்துள்ளது. அதில், குறிப்பாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்தது..

இந்தநிலையில் அனைத்து நாட்களும் கோவில் திறக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சரின் முடிவை வரவேற்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், நவராத்திரி திருநாளில் தமிழக பாஜக வேண்டுகோளுக்கிணங்க எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க உத்தரவிட்ட முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கும் அறநிலை அமைச்சர் சேகர்பாபு  அவர்களுக்கும் நன்றி! என்று குறிப்பிட்டுள்ளார்..

அதேபோல தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் பெரு முயற்சியாலும் தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி போராடியதின் விளைவாகவும், தமிழகத்தில் அனைத்து நாட்களும் கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |