Categories
மாநில செய்திகள்

போராட்டம் நடத்தலாம்…. அனுமதி கொடுப்போம்….. கட்டுப்படுத்த மாட்டோம் …. முதல்வர் உறுதி …!!

இது ஜனநாயக நாடு என்பதால் போராட்டம் செய்வதற்கு உரிமை உண்டு, போராட்டத்தை கட்டுப்படுத்துவது என்று கிடையாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

இன்று  கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த ஒரு சிறுபான்மை இன மக்களும் அச்சப்பட தேவையில்லை. அதிமுக ஆட்சிக்கு இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காக பொய்யான தகவலை திமுகவினர் பரப்பி வருகின்றனர். அரசின் திட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் திமுக தலைவர் மு க ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இது ஜனநாயக நாடு என்பதால் போராட்டம் செய்வதற்கு உரிமை உண்டு. போராட்டத்தை கட்டுப்படுத்துவது என்று கிடையாது. யாரையும் ஜனநாயக நாட்டில் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. எங்களுடைய அரசாங்கம் போராட்டத்தை கட்டுப்படுத்தாது. இந்தியாவில் எந்த போராட்டம் நடத்தினாலும் அனுமதி கொடுக்கின்ற ஒரே அரசு  எங்களின் அரசு. யாயையும் தடைசெய்யவில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

Categories

Tech |