இலங்கை அதிபருக்கு எதிராக நடந்த போராட்டக் களத்தில் பாடி தனது எதிர்ப்பை பதிவு செய்த பிரபல பாடகர் ஷிராஸ்-ரூட் பாய் போராட்ட களத்திலேயே மயங்கி உயிரிழந்துள்ளார். பாப் மார்லேயின் பிரபல பாடலான “கெட் அப் ஸ்டேண்ட் அப்” என்ற பாடலை அவர் பாடி முடித்ததும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மயங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories