மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் முதல் முறையாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அதனை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அந்த நாட்டின் கேன்பெர்ராவுக்கு அவர் இன்று சென்றடைந்திருக்கின்றார். இந்த நிலையில் அவருக்கு இந்தியாவின் மூவர்ண கொடியின் வண்ணம் வெளிப்படும் விதமாக நாடாளுமன்ற இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது மூவர்ண வரவேற்புடன் கேன்பெர்ரா வந்தடைந்து இருக்கின்றேன்.
ஆஸ்திரேலியாவின் பழமையான நாடாளுமன்ற இல்லம் நம்முடைய தேசிய வண்ணத்தில் காண்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது என கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் கேன் பெர்ரா மற்றும் சிட்னி போன்ற நகரங்களுக்கு அவர் செல்கின்றார் இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடபாண்டில் முதன் முறையாக மெல்போன் நகரில் நடைபெற்ற குவாட் வெளியுறவு மந்திரிகள் மட்டத்திலான கூட்டத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த நாட்டிற்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது சுற்றுப்பயணம் ஆகும் இது இந்த சுற்று பயணத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சக வெளியுறவுத்துறை மந்திரியான பென்னி வாங்கை சந்தித்து 13 வது வெளியிடவும் மந்திரிகள் கூட்டமைப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபடுகின்றார்.
இதேபோல் அந்த நாட்டு துணை பிரதமர் மற்றும் ராணுவ மந்திரியான ரிச்சர்ட் பேசுகின்றார். இதன்பின் பென்னி வாங்க் மற்றும் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இருவரும் கூட்டாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியுள்ளனர். இதில் பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர் உக்ரின் போரால் இந்தோ பசுபிக் பகுதியில் ஏற்படப் போகும் பின் விளைவுகள் பற்றி விரிவான அளவில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அமைப்பின் முன்னேற்றம் ஜி 20 விவகாரங்கள் நம்முடைய முத்தரப்பு விஷயங்கள் சர்வதேச அணு ஆற்றல் கழகம் மற்றும் பருவ கால நிதிக்கான எட்டக்கூடிய வளர்ச்சிக்கான இலக்குகள் போன்றவற்றைப் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இரண்டு நாடுகளும் ஒரு சிறந்த பகுதியாக எப்படி வடிவமைப்பது என இரு தரப்பு விவகாரங்கள் பற்றி நாங்கள் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் என அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார மற்றும் பாதுகாப்பு தூய எரிசக்தி போன்ற எண்ணற்ற விஷயங்களை பற்றி நாங்கள் பேசி உள்ளோம் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதேபோல் அந்த நாட்டுத் துணை பிரதமர் மற்றும் ராணுவ மந்திரியான ரிச்சர்ட் மார்லெஸ்ஸையும் செய்யும் மத்திய மந்திரி சந்தித்து பேசி உள்ளார்.