Categories
உலக செய்திகள்

போரின் ஆட்டத்தை மாற்றியமைக்க…. புதிய ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்க…. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை….!!

நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நடைபெற்று வரும் போர் தாக்குதல்களை மாற்றியமைக்க எத்தகைய புதிய ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பலாம் என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் பரிசீலித்து வருகின்றார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து பல்வேறு ராணுவ உதவுகள் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றனர்.   அமெரிக்கா தங்களது தனிப்பட்ட சிறப்பான போர் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி ஆதரவு அளித்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அடையாளம் தெரியாத பென்டகன் மூத்த அதிகாரி கூறியதாவது, “உக்ரைனுக்கு மேலும் 775 மில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கும் என்பதை உறுதிப்படுத்தினார். அத்துடன் ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம்ஸ் (HIMARS) ஹோவிட்சர்களுக்கான கூடுதல் வெடிமருந்துகள் ஆகியவற்றை அமெரிக்கா இந்த தொகுப்பில் வழங்கும்.

மேலும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில், போரின் ஆட்டத்தை மாற்றியமைக்கும் தேசிய மேம்பட்ட மேற்பரப்பு-விமான ஏவுகணை அமைப்புகளை (NASAMS) உக்ரைனுக்கு மாற்றுவதற்கு நாடு தேர்வு செய்யலாம் என்றும், உக்ரேனிய இராணுவத்தின் வெற்றியை உறுதி செய்வதே முக்கிய குறிக்கோள்” என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு உக்ரேனிய மற்றும் ரஷ்ய படைகளின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களுக்கு மத்தியில் வெளிவந்துள்ளது. இதற்கிடையில், ரஷ்ய அதிகாரிகள் உக்ரைன் Zaporizhzhia அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ள Energodar என்ற நகரத்தில் வேலைநிறுத்தங்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |