ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது படைகளால் உக்ரைனை கைப்பற்ற முடியும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று அவரைப் பற்றி நன்கு அறிந்த அமெரிக்க உளவுத் துறை(சிஐஏ) இயக்குனர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது அதீதி பலம் பொருந்திய ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் தங்களது கண்டனத்தை ரஷ்யாவிற்கு தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் ரஷ்யப் படைகளால் உக்ரைனை கைப்பற்ற முடியும் என்ற எண்ணத்தை அதிபர் விளாடிமிர் புதின் மாற்றிக்கொள்ளவில்லை என்று அவரைப் பற்றி நன்கு அறிந்த அமெரிக்க உளவுத்துறை இயக்குனரான பில் பர்ன்ஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான எந்த அறிகுறிகளையும் அதிபர் விளாடிமிர் புதின் காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரேன் எதிர்ப்பை முறியடிக்கும் அவரது ராணுவத்தின் திறனில் அதீத நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.