Categories
உலக செய்திகள்

போரில் பின்னடைவு…. இவர் தான் காரணம்…. முக்கிய தளபதியை நீக்கிய புதின்….!!!

உக்ரைன் ரஷ்யா போரில் ராணுவ தளவாட நடவடிக்கைகளை நிர்வகித்த ராணுவ ஜெனரல் டிமிட்ரி புல்கோவ்-வை அவரது பதவிலிருந்து ரஷ்ய ஜனாதிபதி புதின் நீக்கியதாக தெரியவந்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையினான போர் நடவடிக்கையிலிருந்து இரு நாடுகளும் தங்களது இலக்குகளில் தீவிரமாக இருந்து வருவதால் போர் நடவடிக்கை 7 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் உக்ரைனிய  ராணுவ படைகளின் சமீபத்திய எதிர்ப்பு தாக்குதலால் ரஷ்யா ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பொதுமக்கள் குடியிருப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னடைவால் ரஷ்ய ஜனாதிபதி புதின் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு முதல் முறையாக படை அணி சேர்ப்பை ரஷ்யாவில் அறிவித்துள்ளார். மேலும் ரஷ்ய ராணுவ படைகளின் இந்த பின்னடைவிற்கு ஆயுதங்கள் பரிமாறப்படும் தளவாட நடவடிக்கையில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும்  தாமதங்களே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் ராணுவ தளவாட நடவடிக்கைகளை நிர்வாகித்த ராணுவ ஜெனரல் டிமிட்ரி புல்கோவ்-வை சனிக்கிழமை அவரது பதவியிலிருந்து ரஷ்ய ஜனாதிபதி புதின் நீக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து தகவலை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் டெலிகிராம் வழியாக சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. இதில் 67 வயதான ராணுவ ஜெனரல் டிமிட்ரி புல்கோவ் புதிய பாத்திரத்திற்கு மாற்றுவதற்காக விடுவிக்கப்பட்டார் என்றும் அவருக்கு பதிலாக கர்னல் ஜெனரல் மிகைல் மிஜின்ட்சேவ் மரிய போல் தாக்குதலை நிர்வகிப்பார் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஜெனரல் புல்கோவ் கடந்த 28 முதல் ராணுவத்தின் தலைவாட நடவடிக்கைகளை நடத்தி வருகின்றார். கடந்த 2015-ல் சிரியாவிற்கு அனுப்பப்பட்ட பின்னர் ரஷ்ய திருப்புகளை வழங்குவதற்கான பொறுப்பை பெற்றுள்ளார.

Categories

Tech |