உக்ரைன், ரஷ்யா இடையே கடந்த பல மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது இந்த போரின் காரணமாக மிகப்பெரிய பாதிப்பை இரண்டு நாட்டு குடிமக்களும் சந்தித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இந்த போருக்கு மத்தியில் உக்கிரனை சேர்ந்த ரஷ்யாவில் பிறந்த மணமகள் அலோனா பர்மகா(28), மணமகன் செர்ஜி நோவி கோவ்(37) ஆகிய இருவரும் இமாச்சலப் பிரதேசம் தர்மசாலா வந்து இருக்கின்றனர். காதல் ஜோடிகளான இவர்கள் தர்மசாலாவில் உள்ள பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இருவரும் நிருபர்களிடம் பேசும் போது போர் வேண்டாம் அன்பு தான் வேண்டும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டோம் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தோம்.
இந்த நிலையில் கடந்த வருடம் நாங்கள் இந்தியா வந்திருக்கின்றோம். இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்வதற்காக தர்மசாலா வந்து இருக்கின்றோம். மேலும் ரஷ்யா உக்ரைனும் ஒரு காலத்தில் சகோதரர்களை போல இருந்தது. போர் என்பது அங்குள்ள சாமானிய மக்களுக்கானது அல்ல போரிடும் இருநாட்டு அரசுகளுக்கானது நாங்கள் இந்தியாவையும் அதன் கலாச்சாரத்தையும் நேசிக்கிறோம் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திருமணம் பற்றி தர்மசாலா பதிவு அதிகாரி ஷில்ப் பெத்தா பேசும் போது தர்மசாலாவில் 40 சதவீதம் வெளிநாட்டினர் தங்கள் திருமணங்களை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்கின்றார்கள். அதன்படி இந்த திருமணமும் சிறப்பு திருமண சட்டத்தின் 11 வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.