Categories
உலக செய்திகள்

போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்ய அதிபர் விருப்பம்…. தகவல் தெரிவித்த முக்கிய நபர்….!!

புதின் உக்ரைன் ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவது போல தெரிவதாக துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

துருக்கி நாட்டின் ஜனாதிபதியான எர்டகான் (Recep Tayyip Erdogan), புதின் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர வழி தேடுவதாக தான் நம்புவதாகவும், முக்கிய அடி ஒன்றை அவர் எடுத்து வைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தான் சமீபத்தில் புதினுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளிலிருந்து அவர் உக்ரைன் போரை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக தெரிகின்றது என்கிறார் எர்டகான். உக்ரைன் தான் ரஷ்யப் படைகளிடம் இழந்த சில பகுதிகளை இம்மாதம் மீட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யா சில சிக்கல்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ள எர்டகான், தான் புதினுடன் மிக நீண்ட விவாதங்களை மேற்கொண்டதாகவும், அதிலிருந்து அவர் சீக்கிரத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர விருப்பம் காட்டுவது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எர்டகான் தொடர்ந்து போரில் மத்தியஸ்தம் செய்ய முயன்று வந்துள்ளார். அத்துடன், உக்ரைனில் சிக்கியிருந்த உணவு தானியங்களின் ஏற்றுமதி மீண்டும் துவங்குவதற்கான மத்தியஸ்தம் செய்வதற்கு, ஐக்கிய நாடுகள் சபைக்கு உதவியாக எர்டகான் செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |