Categories
உலக செய்திகள்

போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமா….? அப்படின்னா உடனே இதை செய்யுங்க…. ரஷ்ய அதிபர் புதினின் குற்றச்சாட்டு….!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரேன் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டியுள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான உக்ரேன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 1.3 கோடி உக்ரைன் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். மைலம் இரண்டாம் உலகப் போருக்கு பின் மிக மோசமான இடம்பெயர்வு என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் மக்ரோனிடம் தொலைபேசியில் பேசினார்.

அப்பொழுது அவர் கூறுவதாவது “உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதை மேற்கு நாடுகள் நிறுத்த வேண்டும். இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடன் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. உக்ரைன் மீது உரிய அழுத்தங்களை கொடுப்பதன் மூலமும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதை நிறுத்துவதன் மூலமும் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்று ரஷ்ய தரப்பில் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறோம். என்றும் உக்ரைன் மீதான ராணுவப் படையெடுப்பால் உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |