போர்க்கப்பல்களில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பொருத்தப்படும் என அதிபர் கூறியுள்ளார்.
ரஷ்ய நாட்டின் அதிபர் புதின் அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க்கப்பல்களுக்கு சிர்கான் ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் வழங்கப்படும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். இன்று செயின்ட் பீட்டர்ஸ் பார்க் நகரில் கடற்படை தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் புதின் கலந்து கொண்டார். அவர் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு கப்பற்படை மிகுந்த பங்காற்றுகிறது என்றார்.
அதன் பிறகு கப்பலில் பொருத்தப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் பொருத்தப்படுகிறது என்றார். மேலும் ரஷ்யாவிற்கு அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்றும், நோட்டா அமைப்பின் மூலம் உள் கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது எனவும் புதின் கூறினார்.