Categories
தேசிய செய்திகள்

போர்க்களமாக மாறிய சட்டசபை…. பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் 5 பேர் சஸ்பெண்ட்….!!!!

மேற்கு வங்க சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று கூடியது. அப்போது பிர்பூமில் நடந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கூறினர். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பா.ஜ.க எம்.எல்.ஏ களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி சட்டசபையே போர்க்களமாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சட்ட சபையை விட்டு வெளியேறி போராட்டம் நடத்தினார்கள். சட்டசபையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க எம்.எல்.ஏக்களான‌ நர்ஹரி மகோதா, தீபக் பர்மன், சங்கர் கோஸஷ், மனோஜ் திக்கா, சுவேந்து அதிகாரி ஆகிய 5 பேரையும் சபாநாயகர் பணியிடை நீக்கம் செய்தார்.

இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் சட்டம் ஒழுங்கு பற்றி விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் ஆளும் கட்சியினர்‌ இதற்கு மறுப்பு தெரிவித்தனர். மேலும் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் எங்களுடன் சண்டையிடுவதற்காக கொல்கத்தா காவல்துறையினரை பாதுகாப்பு அதிகாரிகளின் உடையில் அழைத்து வந்துள்ளனர். இதை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்துவோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகருக்கு புகார் அளிப்பேன் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் கூறினார்.

Categories

Tech |