நேபாளத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அப்பகுதி முழுவதுமாக போர்க்களமாக மாறியது.
நேபாளத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும், சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காத்மாண்டு பள்ளத்தாக்கில் இருக்கின்ற லலித்பூர் மாவட்டத்தில் மச்சீந்திரநாத் ஜாத்ரா தேரோட்டத்தை நடத்துவதற்கு நேற்று உள்ளூர் மக்கள் அனைவரும் முயற்சித்துள்ளனர். தேர் இழுக்க முயற்சி செய்து அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் கலவரம் உண்டாகியது.
அதனால் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. பொதுமக்கள் அனைவரும் கற்களை வீசி காவல்துறையினரை தாக்கியதால், போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும் மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் போர்க்களமாக மாறியது. மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க அப்பகுதி முழுவதும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.