உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக ஏற்கனவே வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான (போர்வெல்) உதிரிபாகங்கள் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் டீசல் விலையும் நான்கு மாதங்களுக்குப் பிறகு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் ஏற்கனவே போர்வெல் அமைப்பதற்கான செலவில் இருந்து தற்போது கூடுதலாக ஒரு அடிக்கு ரூபாய் 7 வரை செலவு உயர்ந்துள்ளது. எனவே போர்வெல் கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.
அதன்படி, போர்வெல் அமைக்க 300 அடி வரை ஒரு அடிக்கு ரூபாய் 90 என்றிருந்த கட்டணம் ரூபாய் 15 அதிகரித்து ரூ.105 ஆகவும், 400 அடி வரை ரூ.115 ஆகவும், 500 அடிவரை ரூபாய் 125ஆகவும், 600 அடி வரை ரூபாய் 145 ஆகவும் ஒவ்வொரு 100 அடிக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வால் போர்வெல் அமைப்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.