Categories
உலக செய்திகள்

போர் குற்றவாளிக்கு…. வாழ்நாள் சிறை தண்டனை…. உக்ரைன் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு….!!

ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

ரஷியா உக்ரைன் இடையேயான போரின் காரணமாக முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு இன்று  வழங்கப்பட்டுள்ளது. உக்ரைனின் தலைநகரான கீவ்வில் உள்ள நீதிபதிகள் குழு, போர்க்குற்றவாளி விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கியது. 21 வயதுடைய ரஷ்ய ராணுவ வீரரான ஒருவர் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பின் ஆரம்ப கட்டத்தில், நிராயுதபாணியான உக்ரைன் நாட்டை சேர்ந்த 62 வயது மூதாட்டியை கொன்றதற்காக கைதுசய்யப்பட்டுள்ளனர்.  உக்ரைனின் வடகிழக்கு சுமி பகுதியில் ஒரு கிராமத்தில் உக்ரேனிய குடிமகனை தலையில் சுட்டுக் கொன்றுள்ளார்.

இந்நிலையில், அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார். தன் மீதான அழுத்தத்தின் காரணமாக அவ்வாறு செய்து விட்டதாகவும் அவர் கோர்ட்டில் முன்னதாக தெரிவித்துள்ளார். அனைத்து தண்டனை நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது;- “நான் உண்மையாக வருந்துகிறேன். அந்த சம்பவம் நடத்த நான் விரும்பவில்லை,  ஆனால் அது நடந்தது. மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இதற்காக அனைத்து தண்டனை நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளத் தயார்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து போர் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் எனக் கேட்ட வழக்கறிஞர்கள்,  இது ஒரு கிரிமினல் குற்றம் என்பதை நன்கு அறிந்துகொண்டே இந்த செயலை செய்தார் எனத் தெரிவித்துள்ளனர். இந்த போர்க்குற்ற விசாரணையில் உக்ரைன் கோர்ட்டில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, போர்க் குற்றங்களுக்கான முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷ்ய வீரர் வாடிம் ஷிஷிமரின்க்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |