உக்ரைன் மீது ரஷ்யா 44-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யா தங்கள் தரப்பிற்கு ஏற்பட்டுள்ள பெரிய இழப்பையும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனிய ராணுவ வீரர்கள் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள பூங்கா ஒன்றில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கையில் துப்பாக்கியுடன் ராணுவ உடையில் Anastasia-Vyacheslav ஜோடி திருமணம் செய்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவ்வாறு உக்ரைனில் போர் நடந்து வரும் சூழலில் திருமண பந்தத்தில் இணைந்துள்ள ராணுவ வீரர்களான Anastasia-Vyacheslav ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.