Categories
உலக செய்திகள்

போர் தொடங்கிய பின் முதல்முறையாக… அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுடன் உக்ரைன் அதிபர் நேரில் சந்திப்பு…!!!!!

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான மோதல்  நீண்ட காலமாக நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைன்  மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிக சக்தி படைத்த கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ஜெலன்ஸ்கி போர் தொடங்கிய பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பாக ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைனின்  பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்காக நான் அமெரிக்கா செல்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அமெரிக்கா சென்றுள்ள ஜெலன்ஸ்கி இந்த பயணத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்க காங்கிரசின் ஆதரவுக்கு மிக்க நன்றி. ஜனாதிபதிக்கு நன்றி. மேலும் இரு கட்சி ஆதரவுக்கு நன்றி. எங்கள் சாதாரண மக்களின் சார்பாக அமெரிக்கா மக்களுக்கும் நன்றி என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து  பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், நம்புவது கடினம், ஏனென்றால் இந்த கொடூரமான போரில் 300 நாட்கள் கடந்து புதின் ஒரு தேசமாக இருப்பதற்கான உக்ரைனியர்களின்  உரிமையின் மீது கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார்.

இது அச்சுறுத்தும் காரணத்திற்காக தவிர வேறு எந்த காரணமும் இல்லாமல் ஏராளமான அப்பாவி உக்ரைனிய மக்கள் மீது அவர் தாக்குதல் நடத்தியுள்ளார் என கூறியுள்ளார். முன்னதாக பக்முத் நகருக்கு முன்னறிவிப்பு இல்லாமல் சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அங்கு ராணுவ வீரர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அங்கிருந்த ராணுவ வீரர்கள் சிலர் உக்ரைன் தேசிய கொடியில் தங்களின் கையொப்பங்களை இட்டு ஜெலன்ஸ்கியிடம் வழங்கியுள்ளனர்.  அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனிடம் அந்த கொடியை கொடுக்கும்படி ராணுவ வீரர்கள் கேட்டுக் கொண்டனர். அதன்படி ஜோபைடனை  சந்திக்கும் ஜெலன்ஸ்கி  அந்த கொடியை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்குமிடையேயான  போர் தீவிரம் அடைந்து வருகின்ற நிலையில் இரு நாடுகளின் தலைவர்களும் தங்களின் ஆதரவு நாடுகளுக்கு திடீர் பயணம் செய்து வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Categories

Tech |