Categories
உலக செய்திகள்

போர் தொடுக்க விருப்பமில்லை என கூறிய ரஷ்யா…. படைகளை திரும்பப் பெற உக்ரைன் வேண்டுகோள்….!!

போரை விரும்பாவிட்டால் படைகளை திரும்பப் பெறுங்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் எல்லைகளில் சுமார் ஒரு லட்சம் வீரர்களை குவித்துள்ள ரஷ்யா உண்மையில் போர் தொடுக்க விரும்பவில்லை என்றால் படைகளை விலக்கிக் கொண்டு மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அந்நாடு  கூறியுள்ளது .

ஏனென்றால் எல்லைகளில் குவித்துள்ள படைகளால் எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது  போர் தொடுக்கலாம்  என்ற அச்சத்தில்உக்ரைன்  இருந்து வருகிறது . இவ்வாறு போர்  தொடுப்பதால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவை எச்சரித்து வருகின்றது .உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுப்பது அந்த நாட்டை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்வதற்காக தான் என அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குறைகூறி வருகின்றது .

இந்நிலையில் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர், தங்கள் நாடு போர் தொடுக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.மேலும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் படைகளைக் குவிக்க போவதில்லை என தங்களுக்கு உறுதி அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில்   தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள  உக்ரைன்  வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரே  குலேபா , ரஷ்யா ராஜாங்க ரீதியான பேச்சு வார்த்தையை தொடர வேண்டும். மேலும் எல்லைகளில் குவித்து வைத்திருக்கும் படைகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |