நாகலாந்தின் மூன்று தீவிரவாத அமைப்புகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு மீண்டும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.
நாகாலாந்தின் மூன்று தீவிரவாத அமைப்புகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை, மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்திருக்கிறது. வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், முதல்வர் நீபு ரியோ தலைமையில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு நீண்ட காலமாக தீவிரவாத பிரச்னை இருக்கிறது.இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு, தீவிரவாத அமைப்புகளுடன் பல சுற்று பேச்சு நடத்தியுள்ளது.
இதன் பலனாக, நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் என்.கே., நாகாலாந்து சீர்திருத்த தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில், நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் கேகாங்கோ ஆகிய அமைப்புகளுடன், போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும் இதனுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை, அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.