Categories
உலக செய்திகள்

போர் பதற்றத்தை தணிக்க…. RELAX வடிவ பாதையில்…. வைரலாகும் விமானத்தின் புகைப்படம்….!!!

உக்ரைன் போர் பதற்றத்தை தணிக்க RELAX என்ற வடிவில் விமானம் ஒன்று  வந்ததாக கூறி பலரும் அதன்  புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வரும் இந்நேரத்தில் மால்டோவா நாட்டில்  விமானம் ஒன்று RELAX  என்ற வடிவில் இயக்கப்பட்டுள்ளது. இந்த செயல் போர் பதற்றத்தை தணிக்கவே RELAX என்ற வடிவில் வந்ததாக கூறி பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர். ஆனால் RELAX மால்டோவா என்ற ரேடியோ நிறுவனத்தின் விளம்பரத்திற்காக இதுபோன்று பறந்ததாக விமானி கூறியுள்ளார். மேலும் RELAX மால்டோவா என்ற ரேடியோ நிறுவனம் உக்ரைன் நாட்டிற்கு அருகே உள்ள மால்டோவா நாட்டின் தேசிய விமான நிறுவனமாகும். அந்த நிறுவனத்தின்  விமானம் ஒன்று மால்டோவா நாட்டின் தலைநகரான லக்னோவில் இருந்து RELAX என்ற ஆங்கில வார்த்தையின் வடிவப் பாதையில் சென்றுள்ளது.

இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த விமானம் உண்மையில் ஒரு வானொலி நிலையத்திற்கான விளம்பரத்திற்காக அவ்வாறு செய்துள்ளது. மேலும் ரேடியோ RELAX மால்டோவா என்ற அந்த வானொலி நிறுவனத்தின் தொடக்கத்தை வித்தியாசமாக மேற்கொள்ளும் முயற்சியில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து தலைநகர் கிஷினோவிலிருந்து  4.12 மணிக்கு கிளம்பி அந்த விமானம் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் வானில் RELAX என்ற வடிவில்  பயணம் செய்துள்ளது. இந்த விமானம்  5.50 மணிக்கு மீண்டும் கிஷினோவில் தரையிறங்கியுள்ளது.

Categories

Tech |