Categories
உலக செய்திகள்

போர் முடியுமா…? ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்… நள்ளிரவில் நடந்த அவசர கூட்டம்….!!!

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட போரை நிறுத்துவது தொடர்பில் நேற்று நள்ளிரவில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்திருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து வருவது வரும் நிலையில் போரை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நள்ளிரவில் சிறப்பு அவசர கூட்டம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரவாத தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

இதற்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில், அல்பேனியா மற்றும் அமெரிக்க நாடுகள் சேர்ந்து ரஷ்யாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டுவந்தன. அதன் பிறகு, நேற்று முன்தினம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடந்தது.

இதில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. இந்த பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பினர்கள் இருந்த நிலையில், 11 உறுப்பினர்கள் ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர். ஆனால், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனா போன்ற நாடுகள் வாக்களிக்கவில்லை. இந்நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |