ரஷ்யாவில் போர் விமானத்தை புறப்படுவதற்கு முன் ஆய்வு செய்ததில் ஏற்பட்ட விபத்தால் 3 விமானிகள் இறந்துள்ளனர்.
மேற்கு ரஷ்யாவிலுள்ள கழுகாவிலே போர் விமானம் ஒன்று புறப்படுவதற்கு முன் ஆய்வு செய்ததில் விபத்து ஏற்பட்டு 3 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான உடனே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. Tu -22M3 போர் விமானம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது விமானத்திலிருந்து வெளியேறும் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதால் விமானத்திலிருந்த விமானிகள் தங்களின் இருக்கை உடனே பறந்துள்ளனர்.
மேலும் அது குறைவான தூரம் என்பதால் பாராஷூட் வேலை செய்யாமல் இருந்துள்ளது. அதனால் விமானிகள் மூவரும் தரையில் விழுந்து படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.