உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் விவகாரத்தில் உலகம் முழு உண்மையை இன்னும் அறியவில்லை என்று காணொலி வாயிலாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது ஒரு மாத காலத்திற்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய போருக்கு பிறகு ஐக்கிய பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றியுள்ளார். அப்போது அவர் ரஷ்ய படைகளுக்கும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்குமிடையே எந்தவித வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய ஜெலன்ஸ்கி ரஷிய வீரர்கள் குழந்தைகளின் முன்னிலையிலேயே பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்கள்.
மேலும் உக்ரேனியர்களின் கை, கால்களையும், தொண்டையையும் வெட்டியுள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையேயான போர் கோடிக்கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரஷ்யாவை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே பேசிய அவர் உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் விவகாரத்தில் உலகம் என்னும் உண்மையை அறியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.