Categories
உலக செய்திகள்

போர் விவகாரம்: “3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை” எப்போன்னு தெரியுமா…? வெளியான தகவல்….!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையேயான 3 ஆவது கட்ட பேச்சுவார்த்தை வருகின்ற மார்ச் மாதம் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்க போரை கைவிட்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐநா பொது சபை உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளது. அதன்படி 2 நாடுகளும் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்ய தூதுக்குழுவினர் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து விளக்கம் அளித்துள்ளார்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, அரசியல் தீர்வு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நிலைபாடுகள் முற்றிலும் தெளிவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் உக்ரேனிய தூதுக்குழுவின் உறுப்பினரும், சட்டமியற்றுபவருமான அராகாமியா தனது பேஸ்புக் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது வருகின்ற மார்ச் 7ஆம் தேதி ரஷ்யா உக்ரேன் இடையேயான 3வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |