வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா வெற்றி பெற்ற நினைவு நாளை சென்னையில் விமான படையினர் கொண்டாடினர்.
1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போர் நடந்ததில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த நினைவு நாளை 50 ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர். தற்போது 50 ஆவது ஆண்டு விழாவை நிறைவு செய்யும் வகையில் சென்னையில் இன்று மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் இந்திய விமானப்படையின் சூரியகிரண் குழு சென்னையில் ‘நம்ம சென்னை’ என்ற பெயர் பலகை வைத்து அதற்கு மேல் விமானத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தாம்பரம், சூலூர், கோவளம், சென்னை மெரினா கடற்கரை, புதுச்சேரி வழியாக வானில் பறந்து சென்றபடி கொண்டாடினர்.