Categories
சினிமா

“போறபோக்கப் பாத்தா இதுக்கு வாய்ப்பே இல்ல போலயே”…. ஐஸ்வர்யாவால் ரசிகர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி….!!!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா இணைவார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி பிரிவதாக இருவரும் அவர்களின் இணையதளபக்கங்களில் தனித்தனியே அறிவித்தனர். இவர்கள் இருவரும் காதலித்து 2004ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் ரஜினிக்கு விருப்பமில்லை, இருப்பினும் மகளின் ஆசைக்காக மட்டுமே திருமணத்துக்கு ஒப்புக் கொண்டார். இந்நிலையில் 18 வருடங்களுக்கு பிறகு இவர்கள் பிரிவதாக கூறியது உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவாது இவர்கள் 2 பேரும் சேர்ந்து வாழ வேண்டும் என குடும்ப உறுப்பினர்களிடையே அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஐஸ்வரியா இறங்கி வந்தும் தனுஷ் இணைந்து வாழ சம்மதிக்கவில்லை. இந்நிலையில் தனுஷ் இறங்கி வராததால் ஐஸ்வர்யாவும் இனி தனியாக வாழப்போவதாக முடிவெடுத்திருக்கிறார். இதனை வெளிப்படுத்தும் வகையில்  ஐஸ்வர்யா தனது இணையதளபக்கத்தில் தனது பெயரின் பின்னால் தனுஷுக்கு பதிலாக ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார். மேலும் அண்மையில் வெளியான தனது ஆல்பம் பாடலின் ட்ரைலரில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |