Categories
சினிமா

போற போக்குல ஒரு சோசியல் சர்வீஸ்…. “போதைப் பொருளுக்கு எதிராக தனியொருவன்”…. வைரலாகும் வீடியோ….!!!

போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக, தமிழ்நாடு காவல்துறை குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார் மேலும் இந்த படம் போதை “பொருள் நுண்ணறிவு பிரிவு” சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் குறும்படத்தில் பொதுமக்கள் போதைப் பொருள்கள் விற்பவர்கள் குறித்த தகவலை 9498410581 என்ற பிரத்யேக எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த எண் மூலமாக தகவல் அளிக்கும் பொதுமக்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களுக்குக் கூட தெரியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக குறும்படம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குறும்படத்தை தமிழ்நாடு குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் தலைவர் மகேஷ் குமார் அகர்வால் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |