Categories
அரசியல்

“போற போக்குல குறை சொல்லக்கூடாது முதல்வரே”…  ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்…!!!

ஸ்மார்ட் சிட்டி திட்டம் பற்றி போகிற போக்கில் குறை சொல்லக் கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் முதல்வரை விமர்சித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொளத்தூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் முறையாக நடக்கவில்லை. மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உருவாக்கி அதிலும் பல கோடி ரூபாயை மத்திய அரசின் நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிந்த பிறகு இதில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு ஸ்மார்ட்சிட்டி காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை பாயும். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணி மீதான ஊழல் புகார்கள் மீது உரிய விசாரணை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் பற்றி போகிற போக்கில் குறை கூறக்கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முந்தைய அதிமுக அரசை குறை கூறி தற்போதைய ஆட்சியாளர்கள் தப்பித்து விடக்கூடாது. சென்னையில் தேங்கிய மழைநீரை விரைந்து வெளியேற்ற வேண்டும்.

தாங்கள் ஆட்சி காலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு சரியான நடவடிக்கைகளை எடுத்ததால் தான் கனமழை வந்தபோது குறைந்த நேரத்தில் அவற்றை அகற்ற முடிந்தது. தற்போது தண்ணீர் தேங்கியதற்கு திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யாதது தான் காரணம்.  ஸ்மார்ட் சிட்டி திட்டம் தமிழகத்தில் சரியாக செயல்படுத்தப்பட்டு உள்ளது என்று மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |