நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆயிரப்பேரியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான 1.75 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்நிலையில் போலியான ஆவணங்களை தயாரித்து சோமசுந்தர பாரதி என்பவருக்கு நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்திருப்பதாக கண்ணன் தென்காசி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் மணி(49), சோமசுந்தர பாரதி(40) ஆகியோரை கைது செய்தனர். இதற்கு உடனடியாக இருந்த பவுன்ராஜ், முகமது ரபிக், திருச்சியை சேர்ந்த லலிதா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.