Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“போலியான குறுந்தகவல்” மூலம் டாக்டரிடம் 4 3/4 லட்ச ரூபாய் மோசடி…. சைபர் கிரைம் போலீஸ் அதிரடி…!!!!

தர்மபுரியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் கே.ஒய்.சி அப்டேட் செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் டாக்டரின் செல்போனிற்கு குறுந்தகவல் வந்தது. இதனை நம்பிய டாக்டர் குறுந்தகவலில் இருந்த லிங்கை கிளிக் செய்து, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஓ.டி.பி எண் ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் வங்கிக் கணக்கிலிருந்து 4 லட்சத்து 70 ஆயிரத்து 829 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் உடனடியாக தர்மபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் நடவடிக்கை எடுத்து மோசடி செய்யப்பட்ட 4 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டனர். மேலும் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |