Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலியான சான்றிதழ் கொடுத்து…. வழக்கறிஞர் என்ற பெயரில் பலரிடம் மோசடி….. பரபரப்பு சம்பவம்…!!!

போலியான சான்றிதழ் கொடுத்து மோசடி செய்த வழக்கறிஞராக வேலை பார்த்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஜி.அரியூர் கிராமத்தில் அரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரன்(35) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருக்கோவிலூர் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது நடத்தையில் சக வழக்கறிஞர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர் ராஜ்குமார் வீரனிடம் படித்து முடித்ததற்கான சான்றிதழை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் வீரன் ஏதாவது ஒரு காரணத்தை கூறி வழக்கறிஞர் படித்து முடித்ததற்கான சான்றிதழை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனை தொடர்ந்து ராஜ்குமார் திருக்கோவிலூர் வழக்கறிஞர் சங்கத்தில் இருக்கும் வீரனின் சான்றிதழை சரிபார்த்த போது அது போலியானது என்பது தெரியவந்தது.

அவர் புதுக்கோட்டையை சேர்ந்த வேறொரு வழக்கறிஞரின் சான்றிதழில் பெயரை மாற்றி பதிவு செய்துள்ளார். மேலும் வழக்கறிஞர் என்ற பெயரில் வீரன் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், சங்க வழக்கறிஞர்கள் என பலரை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்து பண பலன்களை அடைந்துள்ளார். இதுகுறித்து வழக்கறிஞர் சங்க செயலாளர் சரவணகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் வீரனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |