கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் ஷீலா, பிரியா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 பேர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் யோகா தரப்பி மற்றும் மசாஜ் தெரப்பி படித்துள்ளோம். இந்நிலையில் விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் ஒருவர் எங்களுக்கு அறிமுகமானார். அவர் எனக்கு பல அதிகாரிகளை தெரியும் எனவும், எங்களுக்கு என்.எல்.சி மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். இதனை நம்பி அந்த நபரிடம் சுமார் 8 லட்ச ரூபாயை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்தோம்.
சில நாட்களில் அவர் எங்களுக்கு கொடுத்த பணி நியமன ஆணையை பயன்படுத்தி என்.எல்.சி மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தோம். அங்கு 3 மாதங்கள் வேலை பார்த்தோம். அப்போது நீங்கள் கொடுத்தது போலி பணி நியமனான எனக் கூறிய எங்களை வேலைக்கு வர வேண்டாம் என கூறிவிட்டனர். எனவே பணத்தை வாங்கிக் கொண்டு போலியான பணி நியமன ஆணையை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்த பயனும் இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளனர் b