Categories
உலக செய்திகள்

போலியோ தடுப்பு மருந்து குழுவினர் மீது…. திடீர் துப்பாக்கி சூடு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

போலியோ சொட்டு மருந்து செலுத்தும் குழுவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

உலகிலேயே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டுமே இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய்  உள்ளது. இந்த போலியோ நோய்க்கு சொட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகள் ஆண்டு தோறும் சொட்டுமருந்து முகாம் நடத்தி வருகின்றன. இருப்பினும் இந்த இரு நாடுகளுக்கு  போலியோ சொட்டு மருத்துக்கு எதிராக பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் அங்கு போலியோ சொட்டு மருந்து செலுத்துபவர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகளுக்கு கருத்தடை செய்ய மேற்கத்திய நாடுகளால் பின்னப்பட்ட சதித்திட்டம் தான் போலியோ தடுப்பூசி முகாம்கள் என்றும் தடுப்பூசியில் பன்றி கொழுப்பு பயன்படுத்தப்பட்டிருக்கும் அது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்றும் கூறி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இங்கு போலியோ தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிப்பது வழக்கம். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துவா என்ற  மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தெற்கு வாசிரிஸ்தான் மாவட்டத்தில் போலியோ தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் நேற்று நடைபெற்றது. இங்கு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த சிலர் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணியாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் குழுவை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு  சென்ற பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |