Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“போலி ஆதார் கார்டுடன் திருப்பூரில் தங்கி இருந்த வங்கதேச வாலிபர்”… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!!!

கடந்த 9.1.2018 அன்று திருப்பூர் மாவட்ட நல்லூர் போலீசார் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்த வங்கதேச நாடு குல்னா மாநிலத்தைச் சேர்ந்த மொன்வர் ஹூசைன்(37) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இந்தியாவில் வசிப்பதற்கான போலி ஆதார் கார்டு அவரிடம் இருந்துள்ளது. இதன் மூலமாக அவர் போலி ஆதார் கார்டை தயாரித்து அதன் மூலம் திருப்பூரில் உலவி வந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் போலி ஆவணங்கள் மூலமாக இந்தியாவில் இருந்த குற்றத்திற்காக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதனையடுத்து 77 நாட்கள் சிறையில் இருந்து விட்டு அதன் பின் திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர். இது குறித்து முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மொன்வர் ஹூசைன் போலி ஆவணங்கள் தயாரித்த குற்றத்திற்காக 3 வருட சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்து அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடியுள்ளார். அவர் கூறியதாவது, மொன்வர் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 77 நாட்கள் உடல் சிறையில் தண்டனையை அனுபவித்த அவர் மீதமுள்ள தண்டனையை அவரது சொந்த நாட்டில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Categories

Tech |