மதுரை மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டி பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி பிரபா என்ற மனைவி உள்ளார். இவரது பெயரில் 12 சென்ட் நிலம் இருக்கிறது. இந்நிலையில் லட்சுமி பிரபா பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று தனக்கு சொந்தமான இடத்தை ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்வதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட இடத்தை சர்வேயர் பிரசாத், திருமங்கலம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் லிங்கசாமி மற்றும் போலீசார் உதவியுடன் அந்த நபர் நேற்று அளப்பதற்காக சென்றுள்ளார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சுமி பிரபா, அவருடைய தாய் பாக்கியலட்சுமி ஆகியோர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனை பார்த்ததும் போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.