Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் பணம் கையாடல்…. அரசு ஊழியர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

வங்கி பணத்தை கையாடல் செய்த அரசு ஊழியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியப்பநோரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. கடந்த 2007- ஆம் ஆண்டு செயலாளராக ரகுநாதனும், கூடுதல் செயலாளராக ராமலிங்கம் என்பவரும் வேலை பார்த்து வந்தனர். இருவரும் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் நகை கடன் வழங்கியதாக 2 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்துள்ளனர். இதுகுறித்து கூட்டுறவு துணை பதிவாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் ரகுநாதன், ராமலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ரகுநாதனுக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை, 27 ஆயிரம் ரூபாய் அபராதம், ராமலிங்கத்திற்கு 5 வருடங்கள் ஜெயில் தண்டனை, 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |