மதுரை மாவட்டத்தில் உள்ள கே.கே. நகரில் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை நிர்வாகி டாக்டர் முத்துவேல் ராஜன் என்பவர் மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்கள் மருத்துவமனையில் திருமால்புரம் தங்கவேல் நகரை சேர்ந்த முத்து மனைவி அங்கம்மாள், சக்தி நகரை சேர்ந்த ஜெயசீலனின் மனைவி வைடூரியம் ஆகிய இரண்டு பேரும் காசாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் அங்கம்மாளும், வைடூரியமும் இணைந்து போலியான ஆவணம் தயாரித்து 24.5 லட்சம் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி போலீசார் பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் அங்கம்மாள் மற்றும் வைடூரியம் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.