திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பிருந்தாவன் நகரில் ஜூடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 24 சென்ட் நிலம் செட்டிகுளம் பகுதியில் இருக்கிறது. இந்த நிலத்தை ஒருவர் போலியான ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். இதனை அறிந்த ஜோடி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரியின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மோசடி செய்யப்பட்ட நிலத்தை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேற்று அந்த இடத்திற்கான ஆவணங்களை ஜூடியிடம் ஒப்படைத்தார்.