Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“போலி இருட்டு கடை அல்வா”…. நிர்வாக பங்குதாரர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை டவுன் ஆகிய பகுதிகளில் பல்வேறு இனிப்பு கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் “திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா” என்ற பெயரில் அல்வா விற்பனை செய்துள்ளனர். இதற்கு நெல்லை டவுன் கிழக்கு ரத வீதி இருட்டுக்கடை நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அதன் பங்குதாரர் கவிதா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வர்த்தக முத்திரை பெயரை போலியாக பயன்படுத்தி அல்வா விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து நெல்லை சந்திப்பை சேர்ந்த இனிப்பு கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குபதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |